பாரதத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) அடுத்த தலைமுறை கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையான ருத்ரம் – 1’ன் இறுதிகட்ட சோதனைகளுக்கு தயாராகி வருகிறது. வானிலிருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை எதிரிகளின் ரேடார், தொலைதொடர்பு அமைப்புகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளை வைத்து அந்த அமைப்புகளின் இருப்பிடத்தை துல்லியமாகக் கண்டறிந்து தாக்கி அழித்து எதிரிகளை வலுவிழக்க செய்யும். தற்கால போர்களில் ராடார், தொலைத்தொடர்பு கருவிகள்தான் போர் ஆயுதங்கள் மற்றும் வீரர்களின் கண்களாக செயல்படும் என்பதால், இந்த ஏவுகணை மிக மிக அத்தியாவசியமானது. 100 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை கொண்ட இந்த ஏவுகணையை நமது விமானப்படையின் மிராஜ் 2000, சுகோய் 30 உள்ளிட்ட போர் விமானங்களில் இருந்து ஏவ முடியும்.