இதற்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் சென்றிருந்தார். ஆனால், அங்கு தேசியக் கொடியை ஏற்றுவதாக எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. இதையடுத்து தேசியக் கொடியை ஏற்றாமலேயே அவர் திரும்பினார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடி ஏற்றுவதற்காக சென்றேன். ஆனால் சிறார் சீர்திருத்த இல்லத்தில் ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இதில் அங்குள்ள அதிகாரிகள் மீது எனக்கு வருத்தமில்லை. திருணமூல் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசின் உத்தரவை அவர்கள் செயல்படுத்தியுள்ளனர். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மேற்கு வங்க அரசு தரும் மரியாதை இவ்வளவு தான்” என தெரிவித்துள்ளார்.