டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்கு தலைமைதாங்கி பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், ‘அணுசக்தியை அமைதி பயன்பாட்டுக்கு மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் டாக்டர் ஹோமி பாபாவின் அணுசக்தி திட்டம் தொடங்கியதிலிருந்து பாரதம் மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளது. பாரதத்தின் அணுசக்தி திட்டம் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கே தவிர, மனித வாழ்க்கைக்கு தீங்கு விளைவிப்பதற்கல்ல. மின்சார உற்பத்தி, வேளாண்மை, மருத்துவம், சுகாதாரம், உணவு, வீரிய விதைகள், தண்ணீர் தூய்மையாக்கல், கழிவு மேலாண்மை, பெட்ரோலியத் துறைகளில் அணுசக்தி மற்றும் கதிர்வீச்சு முக்கிய பங்காற்றுகிறது. எனினும் அணுசக்தியின் சமுதாய பயன்பாடு மக்களுக்கு அதிகமாக தெரிவதில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், அமித் ஷாவின் தலைமையின் கீழ் இயங்கும் உள்துறையின் பகுதியாக செயல்படும் தேசிய மொழி துறை, பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. வட்டார மொழிகளில் அறிவியல் தகவல்களை பெருமளவில் பரப்பப்பட வேண்டும் என்று கூறினார்.