பேனா வைக்க மட்டும் நிதி?

திருச்சியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களாகிறது என்ன செய்தீர்கள்? என்று மக்கள் கேட்கின்றனர். ஆன்லைன் ரம்மி செய்ததுதான் மிச்சம். ஆன்லைன் ரம்மி மூலம் பணம் சரியாக வந்துகொண்டிருக்கிறது. அது சிந்தாமல் சிதறாமல் தேவையானவர்களிடம் போய் சேர்ந்துகொண்டிருக்கிறது. மக்களுக்கு நன்மை கிடைக்கிற எந்த திட்டத்தையும் இந்த தி.மு.க அரசு இதுவரை செய்யவில்லை. காரணம் தினம்தோறும் முதல்வர் போட்டோ ஷூட்டிங் செய்கிறார். கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம், கல்வி கடன் ரத்து என்ற எந்த வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றவில்லை. சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு இவைதான் திமுக ஆட்சியின் சாதனைகள். நிதியே இல்லை, என்று கூறிவிட்டு எழுதாத பேனாவை ஏன் வைக்கிறீர்கள்? என்று எல்லோரும் கேட்கின்றனர். பேனா வையுங்கள், நினைவு மண்டபம் கட்டுங்கள். வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், 80 கோடியில் பேனா வைக்க வேண்டுமா? ஆறரை கோடி மக்களுக்கும் பேனா வாங்கி கொடுத்துவிடலாம் 80 கோடியில். நிதியே இல்லை என்று கூறிவரும் இந்த அரசுக்கு இதுக்கு மட்டும் எப்படி நிதி வந்தது?” என்று கேள்வியெழுப்பினார்.