வேகமாக வளரும் பாரத உள்கட்டமைப்புகள்

பாங்க் ஆஃப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் இந்தியா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் , பாரதத்தில் 1950 முதல் 2015வரையிலான 65 வருட காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக உருவாக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளைவிட 2015 முதல் வரும் 2025க்குள்ளான வெறும் 10 வருட குறுகிய காலகட்டத்தில் பாரதம் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை உருவாக்கும். 2025க்குள் தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 1.8 லட்சம் கிலோமீட்டராகவும், ரயில் பாதைகளின் நீளம் 1.2 லட்சம் கிலோமீட்டராகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1950 மற்றும் 2015க்கு இடையில், இந்த தேசம் வெறும் 4,000 கி.மீ மட்டுமே கூடுதல் தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கியது, 2015ல் அதன் மொத்த நீளம் 77,000 கி.மீட்டராக இருந்தது. இருப்பினும் நெடுஞ்சாலையின் நீளம் 2025ம் ஆண்டில் 1.8 லட்சம் கிலோமீட்டரைக் கடக்கும். இது தற்போதுள்ள நீளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ரயில் பாதைகளைப் பொறுத்தவரை, 1950ல் 10,000 கி.மீ ரயில் பாதைகள் மட்டுமே பாரதத்தில் இருந்தன. இது 2015ல் அது 63,000 கி.மீட்டராக உயர்ந்தது. ஆனால் 2025ல் பாரதத்தின் ரயில் பாதைகளின் நீளம் சுமார் 1.2 லட்சம் கிலோமீட்டரைத் தொடும். 2015ம் ஆண்டு முதல் பாரதம் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே போன்ற துறைகளில் போக்குவரத்து மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு திறனை வேகமாக அதிகரித்து வருகிறது.

1995ல் வருடத்திற்கு 777 மில்லியன் டன்னாக இருந்த துறைமுகத் திறன் 2015ல் 1,911 மில்லியன் டன்னாக உயர்ந்து. இது வரும் 2025ல் 3,000 மில்லியன் டன்னாக இரு மடங்கிற்கும் அதிகமாக உயரும். 2015ம் ஆண்டு முதல் பாரதம் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே போன்ற துறைகளில் போக்குவரத்து மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு திறனை வேகமாக அதிகரித்து வருகிறது.

2015ல் 43 சதவீதமாக இருந்த துப்புரவு அணுகல் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் 2021ல் மக்கள் தொகையில் 89 சதவீதத்தைத் தொட்டுள்ளது. 2015ல் 56 சதவீதமாக இருந்த சமையல் எரிவாயு எண்ணிக்கை 2021ல் 100 சதவீதத்தை எட்டியது. 2000மாவது ஆண்டில் 56 சதவீதமாக இருந்த மின்சார வசதி தற்போது 96 சதவீத வீடுகளுக்கு கிடைத்துள்ளது. 2015ல் வெறும் 13 சதவீதமாக இருந்த குழாய் நீர் கவரேஜ் தற்போது 52 சதவீதமாக உள்ளது. அது 2024ல் 100 சதவீதமாகும். குழாய் எரிவாயு இணைப்புகள் 2015ல் 2.5 மில்லியனில் இருந்து இப்போது 10 மில்லியனாக உயர்ந்துள்ளது. மலிவு விலை கிராமப்புற வீடுகள் 2015ல் 10 லட்சமாக இருந்தது இப்போது 25 மில்லியனாக உள்ளது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.