பாரதத்தின் பொருளாதார வளர்ச்சி பிரமாதம்

ஐ.நா. வெளியிட்டுள்ள உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் குறித்த அறிக்கையில், ‘தெற்காசியப் பிராந்தியத்தில் பாரதத்தின் வளர்ச்சி மிகவும் பிரகாசமாக இருக்கும். பாரதப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 2023ம் ஆண்டில் 5.8 சதவீதமாகவும், 2024ல் 6.7 சதவீதமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் உள்நாட்டு தேவை மீட்சியடைந்து வருவது பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான அம்சமாக உள்ளது. இருப்பினும், அதிக வட்டி விகிதம், வெளிப்புறத் தேவையில் காணப்படும் தொய்வு நிலை ஆகியவை தொடர்ந்து நடப்பாண்டுக்கான பாரதத்தின் ஏற்றுமதி மற்றும் முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். பாரதத்தின் பணவீக்கம் 2023ல் 5.5 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், உலகப் பொருளாதாரம் 2023ல் 2.3 சதவீதமாகவும் 2024ல் 2.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.