மத்திய மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங், ஒரு மெய்நிகர் நிகழ்வில் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் (யு.எஸ்.ஐ.பி.சி) உறுப்பினர்களுடன் உரையாடினார். அப்போது அவர், ‘காலநிலை மாற்ற சீற்றத்தைத் தணிப்பதற்கும், பாரதத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், தூய்மையான, நிலையான மற்றும் மலிவு விலை ஆற்றலை அதிகரிப்பது அவசியம். வரும் 2030க்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை அடையும் தீவிர முயற்சியில் பாரதம் முன்னேறிக் கொண்டுள்ளது. கார்பன் உமிழ்வை குறைப்பதில் பாரதம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சூரிய மின்கலங்கள், பேட்டரிகள் தயாரிக்கும் பி.எல்.ஐ திட்டம், பசுமை ஹைட்ரஜனை ஊக்குவித்தல் உள்ளிட்ட உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் அரசின் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன’ என எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழில்துறையினர், 100 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைந்ததற்கு மத்திய அரசுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.