ஐ.நா., பொதுச் சபை தலைவர் பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் பாரதத்தின் துணையால் மாலத்தீவு வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் வெற்றி பெற்றார். அவருக்கு 143 ஓட்டுகளும், எதிர்த்து போட்டியிட்ட ஆப்கன் வெளியுறவு துறை அமைச்சர் சல்மாய் ரசூலுக்கு 48 ஓட்டுகளும் கிடைத்தன. அப்துல்லா ஷாஹித் தன் சிறப்பு துாதராக ஐ.நா.,வுக்கான மாலத்தீவு தூதர் தில்மீசா உசேநையும் முதன்மை செயலராக பாரதத் துணை துாதர் கே.நாகராஜ் நாயுடு குமாரையும் நியமித்துள்ளார். இது குறித்து நாகராஜ் நாயுடு குமார் கூறுகையில், ‘ஐ.நாவின் பிரதிநிதியாக, முக்கிய கொள்கைகளை உருவாக்கும் அமைப்பாக ஐ.நா., பொதுச் சபை திகழ்கிறது. 193 உறுப்பு நாடுகள் அடங்கிய ஐ.நா பொதுச் சபை, சர்வதேச அமைதி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை விவாதிக்கும் தளமாக திகழ்கிரது. அதில், அப்துல்லா ஷாஹித் தலைமையில் பணியாற்ற கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.