பாரத கடற்படை வெற்றிகர பரிசோதனை – உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி குண்டு

 முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கி குண்டு பரிசோதனையை பாரத கடற்படை  நேற்று வெற்றிகரமாக மேற்கொண்டது.

இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது: எம்எச்-60 ‘ரோமியோ’ மல்டி- மிஷன் ஹெலிகாப்டர் ஐஎன்எஸ் விக்த் போர்க்கப்பலில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுக்குப் பிறகு மற்றொரு தனித்துவமான சாதனையை பாரத கடற்படை நிகழ்த்தி காட்டியுள்ளது.

முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிக எடைகொண்ட ‘டார்பிடோ’ எனும் நீருக்கடியில் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் நீர்மூழ்கி குண்டு சோதனை நேற்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட தூரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அந்த குண்டு துல்லியமாக தாக்கி அழித்தது. இது, இந்திய கடற்படை மற்றும் டிஆர்டிஓ-வின் (பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம்) குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனை நிகழ்வாகும்.