பாரத பசுமை ஹைட்ரஜன் சந்தை

‘பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்துதல்: இந்தியாவில் ஆழமான டிகார்பனைசேஷனுக்கான வாய்ப்புகள்’ என்ற தலைப்பில், நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பசுமை ஹைட்ரஜன் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதற்கான, விரைவுபடுத்துவதற்கான பாதையை வழங்குகிறது. இது 2070க்குள் பாரதம் தனது நிகர பூஜ்ஜிய லட்சியங்களை அடைய வழிவகுக்கும். நீர் மின்னாற்பகுப்பு மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜன், உரத்தயாரிப்பு, சுத்திகரிப்பு, மெத்தனால், கடல்சார் கப்பல் போக்குவரத்து, இரும்பு மற்றும் போக்குவரத்து போன்ற கடினமான துறைகளில் டிகார்பனைசேஷனை அடைவதற்கு முக்கியமானதாக விளங்கும். ஹைட்ரஜனை பல ஆதாரங்களில் இருந்து உற்பத்தி செய்ய முடியும் என்றாலும், குறைந்த செலவில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில் பாரதத்தில் தனித்துவமான பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கப்படும். 2050ம் ஆண்டளவில் பாரதத்தில் ஹைட்ரஜன் தேவை நான்கு மடங்காகும். இது உலகலாவியத் தேவையில் சுமார் 10 சதவீதம். இந்த தேவையின் பெரும்பகுதியை நீண்ட காலத்திற்கு பசுமை ஹைட்ரஜனுடன் பூர்த்தி செய்ய முடியும் என்பதால், பாரதத்தில் பசுமை ஹைட்ரஜன் சந்தையின் ஒட்டுமொத்த மதிப்பு 2030ம் ஆண்டில் 8 பில்லியன் டாலராகவும், 2050ம் ஆண்டில் 340 பில்லியன் டாலராகவும் இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.