சௌதியின் நம்பிக்கை கூட்டாளி

தன் பழமைவாத பழக்கவழக்கங்களை விடுத்து புதுவழியில் நடைபோடும் சௌதி அரேபியா, பாகிஸ்தானை கழற்றிவிட்டு முன்னேற்றத்தை நோக்கி நடைபோடுகிறது. தனது ‘விஷன் 2030’ திட்டத்தில் பாரதத்தை தங்கள் அரசின் முக்கியமான கூட்டாளி நாடுகளில் ஒன்றாகவும் தெரிவித்துள்ளது. சமீபத்தில் பாரதத்தின் ராணுவத் தலைவர் ஜெனரல் எம்.எம். நரவானே, சௌதிக்கு சென்றிருந்தார். அங்கு ராயல் சவுதி தரைப்படைத் தலைமையகம், கூட்டுப்படை கட்டளைத் தலைமையகம், கிங் அப்துல் அஜீஸ் இராணுவ அகாடமி ஆகியவற்றை பார்வையிட்டார். தற்போது இரு நாடுகளும் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பாரதம், சௌதியும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டுப் படைகளும் ஒன்றாக பங்குபெறும் முதல் பயிற்சி இது. அடுத்த நிதியாண்டில் நடைபெறவுள்ள இப்பயிற்சிகளுக்காக நமதுப் படைகள் சௌதிக்குச் செல்லவுள்ளன. 2019ல் பிரதமர் மோடி சௌதிக்கு விஜயம் செய்த போது, மூலோபாய கூட்டு கவுன்சில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஆண்டின் தொடக்கத்தில் சௌதி முடி சூடிய இளவரசர் முகமது பின் சல்மான் புதுடெல்லிக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது, பாரதத்தில் 100 பில்லியன் டாலர் முதலீடுகளை அறிவித்தார்.