‘பாரத மண்ணில் செஸ் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. உலக அரங்கில் விரைவில் செஸ் வல்லரசாக பாரதம் உருவெடுக்கும்,” என, நார்வேயின் செசுலக சாம்பியன் கார்ல்சன் தெரிவித்தார். பாரத செஸ் ‘ஜாம்பவான்’ ஆனந்த். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். தற்போதும் பாரதத்தில் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் என பல இளம் நட்சத்திரங்கள் உருவாகியுள்ளனர்.
இதுகுறித்து ஐந்து முறை உலக சாம்பியன், நார்வேயின் கார்ல்சன் 32, கூறியது: பாரத மண்ணில் செஸ் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் உலக அரங்கில் பாரத நட்சத்திரங்கள் மிகவும் நல்லமுறையில் ஜொலிக்கின்றனர். கடந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரை பாரதம் வெற்றிகரமாக நடத்தியது.
உலக செஸ் அரங்கில் விரைவில் பாரதம் வல்லரசாக உருவெடுக்கும். துபாயில் நடக்கவுள்ள குளோபல் செஸ் லீக் (ஜூன் 21- ஜூலை 2) தொடரில் பங்கேற்க இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இதில் வீரர், வீராங்கனையர் ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து விளையாட உள்ளனர். இப்படி புதுமையான தொடர்கள் தொடர்ந்தது நடத்தப்பட வேண்டும். அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் கலந்து கொள்ள முன்னுரிமை தருவேன். இளம் பாரத நட்சத்திரங்களை சந்தித்து
பேசவும் ஆவலாக காத்திருக்கிறேன் என்று தனது பேட்டியில் கூறினார்.