பாரதம் மாறி வருகிறது

ஜலந்தரில் தோபா கல்லூரியின் 65வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், “புதிய கல்விக் கொள்கையின் வாயிலாக 34 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட்டு, கல்வி மற்றும் திறன் வளர்ச்சியிலும், பிராந்திய மொழி கல்வியிலும் சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. திறன் இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் இளைஞர்களுக்கு அதிகபட்ச வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதோடு, மென் திறன்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுவதன் மூலம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சிறந்த தொழில்வளத்தை இளைஞர்கள் பெறுவதற்கு எண்ணிலடங்காத வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய யுகம் பெண்களின் வளர்ச்சிக்குரியது. அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக கல்வியிலும் விளையாட்டிலும் பெண்கள் முன்னேறி வருவது இதற்கு மிகப்பெரிய சான்று. பாரதம் மாறி வருவதையும் இது உணர்த்துகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அமல்படுத்தி தனது வெற்றியை உலக நாடுகளுக்கு மத்திய அரசு பறைசாற்றியுள்ளது. இதன் காரணமாகவே நாட்டில் மென்மேலும் அதிகமான நிதி பரிமாற்றங்கள் இணைய வழி வாயிலாகவும் யு.பி.ஐ தளம் வாயிலாகவும் மேற்கொள்ளப்படுகிறது. வெற்றிகரமான டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வாயிலாக டிஜிட்டல் இந்தியா என்ற கனவை சமூகத்தின் அனைத்து தரப்பினரும் நனவாக்கியுள்ளனர்” என கூறினார்.