சிரியாவின் அரசியல், மனிதாபிமான நிலைமை குறித்து ஐ.நா சபையில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் உரையாற்றிய ஐ.நாவுக்கான பாரதத்தின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா கம்போஜ், “சிரியாவில், ஒரு மின் உற்பத்தி நிலையம் மற்றும் எஃகு ஆலையை கட்டுவதற்காக சிரியாவிற்கு 280 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடன்களை பாரதம் வழங்கியுள்ளது. . அக்டோபர் 2021ல் டமாஸ்கஸில் தகவல் தொழில்நுட்பத்திற்கான அடுத்த தலைமுறை மையம் அமைக்கப்பட்டது.தற்போதைய கல்வியாண்டில் 200 உதவித்தொகைகள் உட்பட, பாரதத்தில் பல்வேறு பிரிவுகளில் படிக்க சிரிய மாணவர்களுக்கு சுமார் 1,500 உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.இருதரப்பு மற்றும் பலதரப்பு வழிகள் மூலம் சிரியாவுக்கு பாரதம் மனிதாபிமான, தொழில்நுட்ப மற்றும் மேம்பாட்டு உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிரது.தொற்றுநோய் மருந்துகள் உட்பட உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்றவை அவ்வப்போது சிரியாவிற்கு வழங்கப்பட்டு வருகின்றன.சிரியாவில் உள்ள பயங்கரவாதத்தை உலகம் புறக்கணிக்க முடியாது.ஐ.எஸ்.ஐ.எல், ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் போன்ற தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் அந்த நாட்டில் தொடர்ந்து செயல்படுகின்றன.ஐ.நா நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அங்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும்போது எச்சரிக்கை மற்றும் கவனத்துடன் இருக்க வேண்டும்.சிரியாவில் மோதல் இன்னும் முடிவடையவில்லை என்பதையும், அரசியல் செயல்முறை இன்னும் தொடங்கவில்லை என்பதையும் நாங்கள் வருத்தத்துடன் கவனிக்கிறோம்.அங்கு மனிதாபிமான நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளது. சிரிய அரபுக் குடியரசின் இறையாண்மை, சுதந்திரம், ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான உறுதியான அர்ப்பணிப்புடன்,ஐ.நா தீர்மானத்திற்கு இணங்க நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். சிரியாவின் அரசியல் பாதையில் ஒரு தீர்க்கமான முன்னோக்கி இயக்கம் அதன் மக்களின் துன்பங்களைத் தணிக்க அவசர கட்டாயமாக உள்ளது.சமீபத்திய வாரங்களில், குறிப்பாக வடகிழக்கு சிரியாவில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்துள்ளன.பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன.சிரியாவிற்குள் அண்டை நாடு நடத்திய ராணுவ நடவடிக்கைகளையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.சிரியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் குறித்து நாங்கள் கவலை தெரிவிக்கிறோம்.நாடு தழுவிய போர்நிறுத்தத்தை அடைய அனைத்து வெளிநாட்டுப் படைகளும் வெளியேறுவது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்தார்.