பாரதத்தில் ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்களை கொல்ல ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப்படையை சேர்ந்த உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த மஷ்ரப்கோன் அசாமோ என்ற பயங்கரவாதியை ரஷ்ய உளவுத்துறை சமீபத்தில் கைது செய்தது. அந்த பயங்கரவாதிக்கு துருக்கியில் குண்டுவீச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. தீவிர சோதனைகளைத் தவிர்ப்பதற்காக அவர் மாஸ்கோ வழியைத் தேர்ந்தெடுத்தார். தாக்குதலுக்குத் தளவாடங்கள் மற்றும் வெடிபொருட்கள் பாரதத்தில் உள்ள தேசதுரோகிகளால் வழங்கப்படவிருந்தன என செய்தி வெளியானது. இதனிடையே அந்த பயங்கரவாதியை கைது செய்து பாரதம் அழைத்து வந்து இதுகுறித்து விசாரிக்கவும் அந்த நபர் குறித்த மேலதிக உளவுத் தகவல்களை பெறவும் மத்திய உளவு அமைப்புகள் ரஷ்யாவிடம் கோரிக்கை வைத்துள்ளன. ரஷ்ய மற்றும் உஸ்பெகிஸ்தான் உளவுத்துறையுடன் நனமது நாட்டு உளவு அமைப்புகள் ஏற்கனவே துறைரீதியாக நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளதால் இந்த சதித்திட்டத்தின் அடித்தளம் குறித்த தகவல்களை பாரதம் விரைவில் பெறுவதற்கு வலுவான வாய்ப்புகள் உள்ளன.