சுதந்திரமைடையும் ஹிந்து கோயில்கள்

கர்நாடக அரசு சமீபத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தினை பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே வெற்றிகரமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. மேல்சபையின் ஒப்புதலை பெற்று விரைவில் இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது ஹிந்து கோவில்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் வகையில் புதிய சட்டத்தை விரைவில் நிறைவேற்ற இருப்பதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அடுத்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் ஹூப்ளி நகரில் பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை பேசுகையில், “தற்போது, கர்நாடக ​​மாநிலத்தில், அரசு அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் தவித்து வரும் ஹிந்து கோயில்களை இனி அரசு சுதந்திரமாக செயல்பட வைக்கப்போகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சட்ட மசோதா அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாகவே மசோதா தாக்கலாகும். இதன் மூலம் எவ்வித கட்டுப்பாடுகளுக்கும் ஆளாகாமல் கோயில்கள் சுதந்திரமாக இயங்கும் என பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.