வங்கிகளின் செயல்பாடு உயர்வு

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2022ம் ஆண்டு மார்ச் உடன் முடிவடைந்த நிதியாண்டில் வங்கிகளின் நிகர செயல்படாத சொத்துக்களின் விகிதம் 1.7 சதவீதமாக குறைந்துள்ளது, எப்போதும் இல்லாத வகையில் 6 ஆண்டுகளில் வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்து விகிதம் 5.9 சதவீதமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், பணவீக்க அழுத்தங்கள், புவிசார் அரசியல் அபாயங்கள் ஆகியவை வருங்காலத்தில் கவனமாக கையாளப்பட வேண்டும் என்றும் இருப்பினும் பொருளாதாரம் தற்போது மீட்சி பாதையில் தான் உள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகிறது. விநியோக சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது, இந்த நிச்சயமற்ற தன்மையால் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பணவீக்க அழுத்தங்கள், புவிசார் அரசியல் அபாயங்கள் ஆகியவை வருங்காலத்தில் கவனமாக கையாளப்பட வேண்டும் என்றும் இருப்பினும் பொருளாதாரம் தற்போது மீட்சி பாதையில் தான் உள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகிறது. விநியோக சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது, இந்த நிச்சயமற்ற தன்மையால் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வணிக வங்கிகள் வலுவான மூலதனத்தை பெற்றுள்ளது. பாதகமான சூழ்நிலையிலும் கூட அனைத்து வங்கிகளும் குறைந்தபட்ச மூலதன தேவைகளை வைத்துள்ளதன. மேலும் வங்கிக் கடன் வளர்ச்சி சீராக உயர்ந்து வருகிறது. இவை ஏற்கனவே இரட்டை இலக்கங்களை எட்டியுள்ளது. வங்கிகள் மூலதனம் மற்றும் பணப்புழக்க நிலைகளை உயர்த்தியுள்ளதால் சொத்து தரம் மேம்பட்டுள்ளது. வங்கிகள் மட்டுமின்றி வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் நல்ல மூலதனத்தை பெற்றுள்ளன. வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டு வெளியேற்றம் மற்றும் அமெரிக்க டாலரின் கணிசமான உயர்வு ஆகியவற்றால் ஏற்ற இறக்கங்கள் கட்டவிழ்த்து விடப்படுவதால் சந்தை அபாயங்கள் அதிகரித்து வருகின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.