அடுத்தடுத்த சர்ச்சையில் ஐ.எம்.ஏ

நாட்டிலுள்ள அலோபதி மருத்துவர்களின் தனியார் சங்கமான இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் (ஐ.எம்.ஏ) சமீப காலமாக தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.அவ்வகையில், சமீபத்தில் தான் சான்றளித்த பொருட்களுக்கு ஈடாக பெரும் பணத்தை ஐ.எம்.ஏ பெற்றதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

பெப்சிகோ:

ஐ.எம்.ஏ எந்த விஞ்ஞான அடிப்படையில் இந்த தயாரிப்புகளுக்கு சான்றளித்தது என யாருக்கும் தெரியவில்லை.அது ஆராய்ச்சி செய்யப்பட்டு அறிவியல் இதழ்களில் வெளியிடப்பட்டதா, ஆய்வு தொடர்பான விவரங்கள் ஐ.எம்.ஏ கைவசம் உள்ளதா அப்படியெனில் ஏன் வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்படவில்லை.ஆரம்பத்தில், இந்த ஒப்புதலுக்காக பெப்சிகோ நிறுவனம் பணம் எதுவும் செலுத்தவில்லை என்று ஐ.எம்.ஏ கூறியது.ஆனால், அதற்கு பதிலாக, பெப்சிகோ மூன்று ஆண்டுகளாக சங்கத்தின் மாநாடுகள் மற்றும் கூட்டங்களுக்கு நிதியுதவி அளித்திருந்தது தெரியவந்தது.பின்னர், பெப்சிகோவின் தயாரிப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க ஐ.எம்.ஏ ரூ.2.25 கோடியை வசூலித்ததும் ஊடக அறிக்கைகள் வாயிலாக வெளியானது.

கிராம்ப்டன் ஏசியன்:

விஞ்ஞானத்தை வலியுறுத்தும் ஐ.எம்.ஏ, 85 சதவீத கிருமிகளைக் கொல்வதாகக் கூறும் பாக்டீரியா எதிர்ப்பு எல்.ஈ.டி விளக்கிற்கு சான்றளித்தது. மேலும், ஏசியன் ராயல் வர்ணம் பூசப்பட்ட சுவரின் மேற்பரப்பில் இரண்டு மணி நேரத்திற்குள் 99 சதவீத தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்வதாகக் கூறும் ஒரு உட்புற வண்ணப்பூச்சுக்கும் சான்றளித்தது. ஆனால், இந்த ஒப்புதலுக்குப் பின்னால் உள்ள விஞ்ஞான ரீதியான பகுத்தறிவு குறித்து ஐ.எம்.ஏவிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.

டெட்டால்:

டெட்டால் கிருமி நாசினி, சோப்பு உள்ளிட்டவைகளுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் ஒப்புதல் இருக்கிறது என ரெக்கிட் ஒளிபரப்பும் பல விளம்பரங்களில் நாம் கண்டிருக்கலாம். அதில், குறிப்பிட்ட தயாரிப்பு மற்ற பிராண்டுகளை விட 10 மடங்கு அதிகமாக தொற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கிறது என சொல்லப்படுகிறது.ஆனால், எந்த குறிப்பிட்ட பிராண்டுகள் என்ற விவரமோ அல்லது அதை நிரூபிக்கத் தகுந்த எந்த அறிவியல் அடிப்படை ஆதாரத்தையும் ஐ.எம்.ஏ இதுவரை வெளியிடவில்லை.

கென்ட்:

கடந்த 2015ம் ஆண்டில் ‘கென்ட்’ என்ற குடிநீர் சுத்திகரிப்பானுக்கு ஒப்புதல் அளித்த பின்னர், 2016 நவம்பரில் டில்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட நூற்றாண்டு மாநாட்டிற்கான ஸ்பான்சர்ஷிப், புரிந்துணர்வு ஒப்பந்தம் என இந்திய மருத்துவ சங்கம் அடுத்தடுத்த பல சிக்கல்களை சந்தித்தது. இதனால், ‘இது ஒரு ஒப்புதல் அல்ல, ஆனால், நீரினால் பரவும் நோய்களை தடுக்கவும் பாதுகாப்பான நீரைப் பயன்படுத்துவதற்காகவுமான ஒரு பொது பிரச்சாரம்’ என ஐ.எம்.ஏ கூறி சர்ச்சைகளுக்கு ஒரு தற்காலிக முர்றுப்புள்ளி வைத்தது.

இதனைத்தவிர கடந்த சில நாட்களாக வேறு சில சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது புதியத் தலைவர் ஜெயலால் தலைமையிலான ஐ.எம்.ஏ.

பாரம்பரிய மருத்துவம் குறித்த கிண்டல்:

யோகா குரு பாபா ராம்தேவ் கேட்ட 25 நியாயமான கேள்விகளுக்கு இதுவரை ஐ.எம்.ஏ பதில் அளிக்கவில்லை ஆனால், அதற்கு முன் அவர் கூறிய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்ட பிறகும் அவரையும் ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளையும் மிரட்டும் விதமாக பாபா ராம்தேவிடம் ரூ. 1,000 கோடி கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளது ஐ.எம்.ஏ. மேலும் பாரம்பரிய மருத்துவங்களை போலி மருத்துவம் என பொருள்படும் விதத்தில் குவாக்கர் (quackery) எனவும் கருத்து தெரிவித்தது ஐ.எம்.ஏ. ஆயுஷ் அமைச்சகம் அறிவித்த கூட்டு மருத்துவமுறை, ஆயுர்வத மருத்துவர்கள் பயிற்சி பெற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வது உள்ளிட்ட பல யோசனைகளை உரிய தெளிவான காரணங்கள் இன்றி எதிர்த்தது ஐ.எம்.ஏ.

மதமாற்றப் பிரச்சாரம்:

இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவரான டாக்டர். ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால், நோயாளிகளையும், சக மருத்துவர்களையும், மருத்துவ ஊழியர்களையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதாக கொரோனா தொற்றுநோயையும் தன் பதவியையும் பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றவர்களை குற்றம் சொல்வதற்கு முன்னால், கிண்டல் செய்வதற்கு முன்னால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்குமா இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன்!?

(ஓப் இந்தியா செய்தியைத் தழுவிய கட்டுரை)

 

மதிமுகன்