இம்ரானின் மோசடி ஆட்சி

பாகிஸ்தானில் கராச்சியில், பிரதமர் இம்ரான் கானின் மக்கள் விரோதக் கொள்கைகள் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு எதிராக பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் (பி.டி.எம்) பேரணியில் உரையாற்றிய பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸின் மூத்த துணைத் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஷாஹித் ககான் அப்பாசி, ‘நாட்டில் அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை உறுதி செய்வதையே பி.டி.எம்மின் போராட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இம்ரான் கான் அரசாங்கம் மோசடியான தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்தது. இம்ரான் கான் அரசு சட்ட விரோதமானது, இந்த திறமையற்ற அரசை ஏற்க மக்கள் தயாராக இல்லை. சட்டவிரோதமான இந்த ஆட்சியாளர்களை அரபிக்கடலில் நாம் உடனடியாக தள்ளாவிட்டால், நாட்டின் பிழைப்பு ஆபத்தில் முடிவடைந்துவிடும்’ என பேசினார்.