இம்ரான் கான் பேச்சுக்கு மறுப்பு

கடந்த ஆண்டு பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் என்ற அமெரிக்காவின் அறிக்கை வெளியானது. அன்றைய தினம், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு உதவிய என் நாடு அவமானத்தை சந்திக்கிறது. அபோட்டாபாத்தில், அல்கொய்தா தலைவர் தியாகி ஒசாமா பின்லேடனை அமெரிக்கர்கள் கொன்றனர். இது பெரிய அவமானம் என்று பேசினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து இம்ரான் கான், உலக அளவில் கடும் கண்டனத்திற்கு ஆளானார். பாகிஸ்தான் எதிர்க்கட்சியினரேகூட இம்ரான் கானை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில், தற்போது இது குறித்து பேசிய பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, ‘இம்ரான் கான் வாய் தவறி அவ்வாறு பேசிவிட்டார். ஒசாமா பின்லேடனை பயங்கரவாதியாகவே பாகிஸ்தான் கருதுகிறது. அல்கொய்தா இயக்கத்தையும் பயங்கரவாத இயக்கமாகவே நாங்கள் கருதுகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.