நிலுவைத்தொகை உடனடி விடுவிப்பு

மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா தொற்று காலத்தை கருத்தில் கொண்டு, சிறு குறு தொழில்களுக்கான அமைப்பான எம்.எஸ்.எம்.இ. அதன் அந்த நிறுவனங்களின் அனைத்து நிலுவைத் தொகையையும் 45 நாட்களுக்குள் விடுவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ஜிஎஸ்டி தொடர்பான பிரச்சினைகளை அகற்றுவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் குழு, நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நலிந்த சிறு வணிக பிரிவுகள், மைக்ரோ மற்றும் சிறு தொழில்கள், பிற அமைப்புசாரா துறை நிறுவனங்களுக்கு மேலதிக ஆதரவை வழங்குவதற்காக ரூ. 10,000 கோடி சிறப்பு மூன்று ஆண்டு கால ரெப்போ நடவடிக்கைகளை (எஸ்.எல்.டி.ஆர்.ஓ) ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடன் வாங்குபவர்களுக்கு ரூ. 10 லட்சம்வரை புதிய கடன் வழங்குவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும். இந்த ஆண்டு அக்டோபர் 31வரை இந்த வசதி கிடைக்கும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.