ஐ.எம்.எப் கணிப்பு

உலக பொருளாதாரம் நடப்பாண்டில் 5.9 சதவீதமும், அடுத்த நிதியாண்டில் 4.9 சதவீதமும் வளர்ச்சி அடையும். சீனாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 8 சதவீதமும், அடுத்த நிதியாண்டில் 5.6 சதவீதமும் வளர்ச்சி அடையும். கொரோனாவால் கடந்த நிதியாண்டில் 7.3 சதவீத சரிவை சந்தித்த பாரதப் பொருளாதாரம், நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீத வளர்ச்சி அடையும். அடுத்த நிதியாண்டில் பாரதப் பொருளாதாரம் 8.5 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப்.