ஐ.எம்.ஏ கிளப்பும் புதிய சர்ச்சை

உத்தரகாண்ட் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் அம்மாநில ஆயுஷ் மந்திரி ஹரக்சிங் ரவத் கலந்து கொண்டார். அப்போது அவர், ‘உட்புற மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களின் நலன் கருதி, அவசர காலங்களில் சில குறிப்பிட்ட அலோபதி மருந்துகளை பரிந்துரைக்க ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அனுமதி வழங்குவது என்று முடிவு செய்துள்ளோம். இங்குள்ள ஆயுர்வேத மருத்துவர்களில் பெரும்பாலானோர் மலைப்பகுதிகளில்தான் இருக்கிறார்கள்.’ என்று கூறினார். இதற்கு இந்திய மருத்துவ சங்கத்தின் உத்தரகாண்ட் மாநில பிரிவு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் அஜய்கன்னா, ‘இந்த முடிவு சட்டவிரோதமானது. இது, கலவை மருத்துவம் ஆகிவிடும். நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்’ என தெரிவித்துள்ளார். ஆனால், இந்த எதிர்ப்பை பாரதீய சிகிட்சா பரிஷத் என்ற அமைப்பு நிராகரித்துள்ளது.