சட்டவிரோத தர்கா

குஜராத்தின் போர்சாத் நகரில் ஹனுமான் கோயிலுக்குப் பின்னால் உள்ள உள்ளூர் நகராட்சி நிலத்தில் சட்டவிரோதமாக முஸ்லிம்களின் தர்கா கட்டப்பட்டுவந்தது. இது அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கட்டுமானத்தை காவல்துறை தடுக்க முயன்றனர். இதையடுத்து அங்குள்ள முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களையும் அங்கு வந்த காவலர்களையும் கொடூரமாகத் தாக்கினர். 4 காவலர்கள் இதில் படுகாயமடைந்தனர். காவலர் விஜய்சிங், 4 முறை கத்தியால் குத்தப்பட்டார். வன்முறையாளர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அதைத் தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சுமார் 50 கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் 30 ரப்பர் தோட்டாக்களை இதற்காக பயன்படுத்த வேண்டியிருந்தது. வன்முறை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அசம்பவிதம் ஏற்படாமல் தடுக்க மாநில ரிசர்வ் போலீஸ் படையின் 200 பேர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.