இவருக்கு சிலையா?

சுவீடனை சேர்ந்த சர்ச்சைக்குரிய சமூக ஆர்வலர் கிரெட்டா துன்பெர்கின் ஆளுயர சிலையை 24,000 பவுண்டுகள் செலவில் வெண்கலத்தில் செய்து, அதனை தங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் வரும் மார்ச் 30ல் நிறுவ இங்கிலாந்தில் உள்ள வின்செஸ்டர் பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. இதற்கு அங்குள்ள மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கிரெட்டா துன்பர்கிற்கும் தங்கள் நாட்டிற்கும் எந்த சம்பந்தமுல் இல்லை. எதற்காக இந்த சிலை இங்கு நிறுவப்படுகிறது என எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர் பாரதத்தில் நடைபெற்ற விவசாய போராட்டத்தை திசை திருப்பி கலவரமாக்க முயற்சித்த சில சர்வதேச நாடுகள், கம்யூனிச சிந்தனையாளர்கள், பயங்கரவாதிகளின் கைப்பாவையாக செயல்பட்டார் என்பது அவரது சமூக வலைத்தள டூல்கிட்டுகள் வாயிலாக ஆதாரபூர்வமாக சமீபத்தில் நிரூபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பாரத்த்தில் மட்டுமல்ல, உலகில் பல நாடுகளிலும் பிரச்சனைகளை ஏற்படுத்தி ஆதாயம் காண முயற்சிக்கும் பலரின் போலி முகமாக கிரெட்டா துன்பர்க் செயல்படுவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.