பாரதத்தின் மனிதாபினான உதவி

போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாடான உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, உக்ரைனுக்கு மருந்துகள் உள்ளிட்ட அவசர நிவாரணப் பொருட்களை வழங்க முடிவு செய்துள்ளது. ஐ.நாவுக்கான பாரதத் தூதர் டி.எஸ் திருமூர்த்தி, உக்ரைனில் பாரதம் வழங்கும் மனிதாபிமான உதவிகளைக் குறித்து ஐ.நா சபையில் தெரிவித்தார். ‘இதுபோன்ற மோதல் காலங்களில், குடிமக்கள், குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு பாரதம் அதிக முன்னுரிமை அளிக்கிறது. மனிதாபிமான உதவியின் அடிப்படைக் கொள்கைகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்’ என்று கூறினார். வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, செய்தியாளர் சந்திப்பின் போது, ‘​​உக்ரைன் தூதரின் வேண்டுகோளின்படி உக்ரைனுக்கு மருந்துகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை பாரதம் அனுப்பும்’ என்று தெரிவித்தார்.