மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஜாதிகள் குறித்து ஆய்வு செய்த, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் கூறியதாவது: மேற்கு வங்கத்தில், 2009 நிலவரப்படி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மொத்தம், 66 ஜாதிகள் இடம் பெற்றுஇருந்தன; இவற்றில், 12 மட்டுமே முஸ்லிம் ஜாதிகளாக இருந்தன. தற்போது இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 179 ஜாதிகள் உள்ளன. இவற்றில் முஸ்லிம்கள் மட்டும், 118 ஆக உள்ளன. ஆனால், இந்த பட்டியலில் ஹிந்துக்களில், 61 ஜாதிகள் மட்டுமே உள்ளன. இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம் ஜாதிகள் எண்ணிக்கை மட்டும் பல மடங்கு உயர்த்தது எப்படி என தெரியவில்லை. அதே நேரத்தில், மேற்கு வங்கத்தில் மொத்த மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் ஹிந்துக்கள் என்றும், முஸ்லிம்கள் 27 சதவீதம் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. இப்படி இருக்கும்போது, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம் ஜாதிகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுவது புரியாத புதிராக உள்ளது. நான் மேற்கு வங்கத்தில் இருக்கிறேனா அல்லது நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருக்கிறேனா என தெரியவில்லை.