வீடு தோறும் குடிநீர் குழாய் திட்டம்

ஜல் ஜீவன் திட்டத்தின்படி, மணிப்பூர் மாநில அரசு வரும் செப்டம்பர் 2022க்குள் மாநிலத்தின் அனைத்து கிராமப்புறங்களிலும் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளது. இன்றுவரை, அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 4.51 லட்சம் கிராமப்புற வீடுகளில், 2.67 லட்சம் அதாவது 59.2 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இதற்காக மத்திய அரசு, மணிப்பூருக்கு ரூ.120 கோடியை வழங்கியுள்ளது. மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தினால், பாரதமெங்கும், தற்போது ​​8.63 கோடி (45 சதவீதம்) கிராமப்புற குடும்பங்கள் தங்கள் வீட்டிலேயே குடிநீர் குழாய்கள் மூலம் குடிநீரைப் பெறுகின்றன. 83 மாவட்டங்கள் மற்றும் 1.27 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீடும் இதனால் பயன் பெறுகிறது.