தஞ்சாவூரில், தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆன்மிக கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசிய சூரியனார் கோவில் ஆதீனம் 28வது குருமகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ‘தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 36 ஆயிரம் கோயில்களும், 6 லட்சம் சிறிய கிராம கோயில்களும் உள்ளன. கோயில்களில் பணியாற்றும் குருக்களுக்கு உரிய ஊதியம் கிடையாது. பக்தர்கள் வழங்கும் காணிக்கை மட்டும்தான் அன்றாடம் செலவுக்கு. தமிழகத்தில் கோயில் நிலங்களை, இடங்களை பயன்படுத்துவோர் அதிகம். அவர்கள், முறையாக குத்தகையை வழங்கினால் தான், கோயில்களின் பூஜைகள் நடக்கும். ஹிந்து கோயில்களுக்கு வழிபட செல்பவர்களில் பலர் பக்தியை விட செல்வாக்குக்கு முனைப்பு காட்டுகின்றனர். அது கூடாது. இறைவனை வழிபடுவோர், அதற்கான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். இஸ்லாம், கிறிஸ்துவ மதங்களில் வழிபாட்டு முறையை, கட்டுப்பாடுகளோடு கடைப்பிடிக்கின்றனர். ஹிந்து மதத்தில் மட்டுமே கட்டுப்பாடுகளும், ஒற்றுமையும் இருப்பதில்லை. இதை, ஹிந்துக்கள் உணர வேண்டும்’ என கூறினார்.