பாகிஸ்தானில் புறக்கணிக்கப்படும் ஹிந்துக்கள்

பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பல இடங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு தங்கியுள்ள ஹிந்துக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிடம் போன்ற அடிப்படை ஆதாரங்களை உள்ளூர் நிர்வாகம் தர மறுத்து வருகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பல ஹிந்துக்கள் “நாங்கள் இந்துக்கள் என்பதற்காக வெளியேற்றப்பட்டுள்ளோம். எங்களுக்கு உணவு, தண்ணீர் வழங்க மறுத்துவிட்டனர். நாங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்று நினைக்கிறார்கள். இப்போது எங்கே போவோம்? குழந்தைகள் எப்படி வாழ வேண்டும்” என்று கதறுகின்றனர். இதனை வெளியிட்டதற்காக அந்த பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டு 5 நாட்கள் அடைக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 31 அன்று, பாகிஸ்தானில் உணவு அளிப்பதாக ஒரு ஹிந்து பெண்ணை அழைத்துச்சென்று பல முஸ்லிம்கள் கூட்டு பலாத்காரம் செய்தனர். மற்றொரு சம்பவத்தில் இதேபோல ஒரு 8 வயது ஹிந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் அந்த சிறுமியின் முகத்தை சிதைத்ததோடு கண்களையும் பிடுங்கி எறிந்தனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசிக்கும் ஹிந்துக்களில் பலர் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள், நில அபகரிப்பு, கடத்தல், கற்பழிப்பு, கட்டாய திருமணம், மதமாற்றம் போன்ற மனித உரிமை மீறல்களை எதிர்கொள்கின்றனர்.