மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் முதல்வர் வீட்டிற்கு அருகில் ‘இளம் பெண்கள் இஸ்லாமிக் அமைப்பை’ சர்ந்த சில முஸ்லிம் பெண்கள் ‘அனைத்து ஹிந்துக்களும் ஹிஜாப் அணியலாம்’ என்ற துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். அங்குள்ள ஹிந்து பெண்களையும் சிறுமிகளையும் ஹிஜாப் அணிய வற்புறுத்தினர். விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில், சம்பவம் நடந்த செப்டம்பர் 4ம் தேதி ‘ஹிஜாப் தினம்’ என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1 தான் உலக ஹிஜாப் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து அப்பெண்கள் ஓட்டம் பிடித்தனர். இந்த பெண்களின் அமைப்பு ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் பெண்கள் பிரிவு. 1948ல் உருவாக்கப்பட்ட ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் இரண்டு முறை பாரத அரசால் தடை செய்யப்பட்டது. இது கஷ்மீரை பிரிப்பதை, முஸ்லிம் அரசு அமைப்பதை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஒரு தீவிர அமைப்பு. ஜமாத் இ இஸ்லாமி ஹிந்தின் மாணவர் பிரிவான இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி) என்பது தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.