இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள ஹிந்து கோயில் ஒன்றில் சில நாட்கள் முன்பு முஸ்லிம்கள் தாக்குதல் நடந்த்தினர். அந்த தாக்குதலின் சில புதிய வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் தற்போது வெளிவந்துள்ளது. அதில், முஸ்லிம்கள் கோயில் வளாகத்திற்குள் இருந்த ஹிந்துக்கள் மீது மாட்டு சாணி உள்ளிட்டவைகளை வீசி துஷ்பிரயோகம் செய்தனர். அச்சில் ஏற்ற முடியாத மிக மோசமான வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தினர். பிரதமர் மோடியையும் தரக்குறைவாக பேசினர். காவலர்கள் வந்து அந்த கும்பலை கோயில் மதில் சுவரில் இருந்து இழுத்து வெளியே தள்ளிவிடத் தொடங்கியபோது ‘அல்லாஹு அக்பர்’ என்று கத்தத் தொடங்கினர். முகமூடியணிந்த ஒரு நபர் அங்குள்ள பெண் காவலர்கள் மீது மீது ஒரு பாட்டிலை வீசி தாக்கியதுடன் தரக்குறைவாக அவர்களை பேசி துஷ்பிரயோகம் செய்தனர். கடந்த இரண்டு மாதங்களில், இங்கிலாந்தில், குறிப்பாக லெய்செஸ்டர் மற்றும் பர்மிங்காமில், ஹிந்துக்களுக்கு எதிரான முஸ்லிம்களின் தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. பாரதத்துக்கு எதிரான டி20 ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் சந்தித்த தோல்விக்கு எதிர்வினை இது என முதலில் தோன்றியது. ஆனால், பாகிஸ்தான் பாரதத்தை மற்றொரு போட்டியில் தோற்கடித்த பிறகும் அவர்கள் இதை நிறுத்தவில்லை. இதனால், இங்கிலாந்து வாழ் முஸ்லிம்கள், இந்த போட்டியை ஒரு சாக்காக பயன்படுத்தி ஹிந்துக்களை, இந்தியர்களை தாக்குகிறார்கள் என்பது உறுதியாகிறது. பல ஹிந்து குடும்பங்கள் லெய்செஸ்டரை விட்டு வெளியேறும் அளவிற்கு தாக்குதல்கள் தீவிரமடைந்தன. வெளியேறிய சில குடும்பத்தினர் இதுவரை வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பல ஹிந்துக்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.