யுஎன் அகாடமியின் ஹிந்து போபியா

ஆன்லைன் கற்றல் தளமான யுஎன் அகாடமி, சமீபத்தில் தன் மாணவர்களுக்காக ஐ.பி.எஸ் தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்தியது. அதன் வினாத்தாளில், ”ஈத் தினத்தன்று ஒரு முஸ்லிம் குழு தங்கள் பேரணியில் கோஷங்களை எழுப்பியபடி ஹிந்துக்கள் அதிகமுள்ள காலனி வழியே வந்தனர். அப்போது, அப்பகுதி ஹிந்துக்கள், தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாகக்கூறி முஸ்லிம்கள் மீது கற்களை வீசத் தொடங்கினர். இது சரியா தவறா’ என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது. இதற்கு ஹிந்துக்கள் மத்தியில் பலத்த கண்டனம் எழவே, ‘அந்த வினாத்தாள் அகற்றப்பட்டது. வினாத்தாள்கள் மூன்றாம் தரப்பினரால் தயாரிக்கப்பட்டது. கேள்வித்தாள்களில் மத விஷயங்கள் தவறாக சித்தரிக்கப்படுவதை தடுப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். ஹிந்துக்களை புண்படுத்திய இந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்’ என யுஎன் அகாடமி தெரிவித்துள்ளது.