குஜராத்தின் தாகோரில் வசித்துவந்த நர்சிங் பயிலும் ஹிந்து மாணவி ஒருவர், முஸ்லிம் இளைஞரின் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இறந்த பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் அப்துல்லா மொமின் என்பவர் கைது செய்யப்பட்டார். அந்த பெண் தனது குடும்பத்துடன் தாகோரில் வசித்து வந்தார். அவரது தந்தை தாகோர் காவல் நிலையத்தில் பணிபுரிகிறார். ,கடந்த மே 10ம் தேதி, அந்த பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்திற்காக வெளியூர் சென்றிருந்தனர். தேர்வு காரணமாக அந்த பெண் வீட்டில் தங்கியிருந்தார். மே 12 அன்று, அந்த பெண்ணை அவரது தாய் அலைபேசியில் அழைத்தார், ஆனால் அது அணைக்கப்பட்டு இருந்தது. பலமுறை முயற்சி செய்தும் மகள் அலைபேசியை எடுக்காததால், அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து, வீட்டிற்கு சென்று பார்க்கும்படி தாய் கூறியுள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் சென்று கதவை பலமுறை தட்டியும் உள்ளே இருந்து பதில் வரவில்லை. அவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அந்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். சிறுமியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் உடனடியாக தாகோரை அடைந்து அந்த பெண்ணின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று அங்கு இறுதி சடங்குகள் செய்து முடித்தனர். மே 18 அன்று, அந்த மாணவியின் தந்தை அவரது அலைபேசியை சோதித்தபோது, அந்த பெண்ணை அப்துல்லா மோமின் என்ற முஸ்லிம் நபர் மிரட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த அலைபேசியில் இருந்து பல செய்திகள் மற்றும் பதிவுகள் மீட்டெடுக்கப்பட்டன. அதில், அப்பெண்ணை அப்துல்லா துன்புறுத்துவதும், மிரட்டுவதும் இருவருக்கும் இடையே நடந்த உரையாடலில் இருந்து தெரிந்தது. மாணவி முன்பு அப்துல்லா காதலித்து வந்தார். ஆனால், சிறிது நாட்களில் அந்த உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்துல்லா அவரை துன்புறுத்தத் தொடங்கினார். கல்லூரியிலும் அலைபேசியிலும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். அந்த பெண்ணுக்கும் வேறொரு இளைஞருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி சமூகத்தில் அவதூறு பரப்புவேன், இதனால் அவர் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுவார், வாழ்க்கையை முழுவதுமாக அழித்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையெல்லாம் நிறுத்துமாறு பலமுறை கெஞ்சிக் கேட்டும் தொல்லை நிற்கவில்லை. இறுதியில் அந்த பெண் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். இந்த பதிவுகள் மற்றும் செய்திகளின் அடிப்படையில், இறந்த ஹிந்து மாணவியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி அப்துல்லா மோமின் கைது செய்யப்பட்டார்.