உக்ரைனியருக்கு ஹிந்து முறைப்படி இறுதிச் சடங்கு

உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் கோஸ்டியான்டைன் பெலியேவ், ஹிந்து மதத்தின் மீது தீவிர பற்று கொண்டவர்.இதனால் கடந்த சில ஆண்டுகளாக உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் தங்கியிருந்தார்.காவி உடையணிந்து சாதுவை போன்று வாழ்ந்துவந்த அவர் தனது பெயரையும் கிருபா பாபா என்று மாற்றிக் கொண்டார்.வடமாநிலங்களில் புனித தல யாத்திரைகள் பூஜை, வழிபாடுகளை நடத்தி வாழ்ந்துவந்தார்.இந்த சூழலில் பாரதத்துக்கு சுற்றுலா பயணியாக வந்த ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் கிருபா பாபாவுக்கு நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது.இருவரும் வாரணாசியின் பெலுப்பூர், நாரத் காட் பகுதியிலுள்ள விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தனர்.கடந்த 25ம் தேதி ரஷ்ய பெண் விடுதியில் இருந்து வெளியே சென்றார்.கிருபா பாபா மட்டும் விடுதி அறையில் தங்கியிருந்தார். மறுநாள் அவரது அறைக் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் காவல்துறையினருடன் சேர்ந்து கதவை உடைத்து பார்த்தபோது கிருபா பாபா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இதுகுறித்து வாரணாசி காவல்துறையினர் உக்ரைனில் வசிக்கும் கிருபா பாபாவின் தாயாரிடம் தொலைபேசியில் விவரம் தெரிவித்தனர்.ரஷ்ய ராணுவத் தாக்குதலில் தனது குடும்ப உறுப்பினர்கள் பலர் உயிரிழந்த சோகத்தால் கிருபா பாபா தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று அவரது தாயார் கூறினார்.அவருடன் தங்கியிருந்த ரஷ்ய பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் மீது சந்தேகம் எழவில்லை.இதனையடுத்து கிருபா பாபா விருப்பப்பட்டு தீவிரமாக பின்பற்றிவந்த ஹிந்து முறைப்படி அவரது இறுதிச் சடங்குகளை நடத்த ரஷ்ய பெண் விரும்பினார்.அதன்படி, ரஷ்ய பெண்ணின் முன்னிலையில் ஹரிஷ்சந்த் படித்துறையில் ஹிந்து முறைப்படி கிவின் உடலுக்கு ருபா பாபாஇறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.