டெல்லி பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான ஹிந்து கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியராக உள்ளவர் டாக்டர். ரத்தன் லால். இவர், அண்மையில் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் குறித்து இவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அவரின் கருத்து மதத்தின் அடிப்படையில் இருவேறு குழுக்களுக்கு இடையே விரோதத்தை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது, சிவலிங்கம் குறித்து தவறாக சித்தரித்துள்ளார் என கூறி, ரத்தன் லால் மீது டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிந்தால் புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ரத்தன் லால் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 153ஏ, 295ஏ ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். முன்னதாக, அவரது பதிவு வைரலான நிலையில், தனக்கு நிறைய ஆன்லைன் மிரட்டல்கள் வருகின்றன என்று ரத்தன் லால் பதிவிட்டிருந்தார்.