சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூரில், அம்மாநிலத்தில் அதிகரித்து வரும் மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்துக்கள் ஆயிரக்கணக்கானோர் இணைந்து ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பின்னர் அங்கிருந்து 600 ஆண்டுகள் பழமையான பைஜ்நாத் கோயில்வரை விழிப்புணர்வு பாத யாத்திரை மேற்கொண்டனர். சர்வ சனாதன் ஹிந்து மகாபஞ்சாயத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த மாபெரும் மதமாற்ற எதிர்ப்பு பேரணிக்கு பிறகு ஆளுநரிடம் மனு சமர்ப்பிக்கப்பட்டது. இதில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களை தவறாக வழிநடத்தி, பணத்தாசைகாட்டியும் பயமுறுத்தியும் மதமாற்றம் செய்யும் மிஷனரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் . லவ் ஜிஹாத்தை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும். மதமாற்றங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, கடந்த வாரம், துர்க் என்ற இடத்தில் ஹிந்து யுவ மஞ்ச் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், மதமாற்றத்திற்கு எதிராக மாபேரணி நடத்தினர் என்பது குறிப்பிடத்தகது.