ஹிஜாப் மாணவிகள் இடைநீக்கம்

கர்நாடகாவில் மீண்டும் திட்டமிட்ட ரீதியில் ஹிஜாப் சர்ச்சை எழுப்பப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் உள்ள உப்பினங்காடி நகரில் அமைந்துள்ளது கல்லூரியில் விதிமுறைகளை மீறி ஹிஜாப் அணிந்த 6 முஸ்லிம் மாணவிகளை கல்லூரி நிர்வாகம் 2 நாட்களுக்கு கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது. கல்லூரியின் அறிக்கையின்படி, முஸ்லிம் பெண்கள் சில நாட்களாக மதம் சார்ந்த உடையில் வகுப்பில் கலந்துகொண்டனர். வகுப்பறையில் அவர்கள் மதம் சார்ந்த உடை அணிந்ததற்கு பல மாணவ மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் அந்த முஸ்லிம் மாணவிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. பலமுறை எச்சரித்த போதிலும், முஸ்லிம் மாணவிகள், கல்லூரி மற்றும் நீதிமன்ற விதிகளை பின்பற்ற மறுத்துவிட்டனர். தேவையற்ற சர்ச்சையை தவிர்க்க, கல்லூரி முதல்வர் தலைமையில் ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பேசிய ஆசிரியர் ஒருவர்,  அவர்களுக்கு திங்கட்கிழமை மீண்டும் வகுப்புகள் துவங்கப்படும். அவர்களுக்கு விட்டுப்போன பாடங்களுக்கு நாங்கள் தனி வகுப்புகள் எடுப்போம்’ என தெரிவித்தார். இதற்கிடையில், மங்களூரு கல்லூரியில் ஹிஜாப் அணிந்த 12 மாணவிகள் தங்கள் மத உடையில் வகுப்பு எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, கல்லூரி சிண்டிகேட் கூட்டத்தை நடத்தி முடிவெடுத்த கல்லூரி நிர்வாகம், அவர்களின் கோரிக்கைகளுக்கு அடிபணியாமல் அவர்கள் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுத்துவிட்டது.