வலுக்கும் ஹிஜாப் போராட்டங்கள்

ஈரானில் 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ‘ஹிஜாப்’ கட்டாயமாக அணிய வேண்டும். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. சமீபத்தில் மாசா அமினி என்ற பெண், தலைமுடியை முழுமையாக மறைக்கும் விதமாக ஹிஜாப் அணியாததற்காக சமீபத்தில் காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவர்கள் தாக்குதலால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் நடக்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் இந்த போராட்டங்களின்போது காவலர்கள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 75க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து போராட்டங்கள் மேலும் தெவிரமடைந்து வருகின்றன. ஈரான் அதிபர், சர்வாதிகாரி அயதுல்லா அலி கமேனி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என போராட்டக்காரர்கள் கோஷமெழுப்புகின்றனர். ஈரானில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அவ்வகையில் மற்றொரு முஸ்லிம் நாடான துருக்கியைச் சேர்ந்த பிரபல பாடகி மெலக் மோஸ்சோ மேடை நிகழ்ச்சி ஒன்றில், தனது முடியை வெட்டி ஈரான் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.