தேர்வில் ஹிஜாப் ரகசியம்

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள எம்.டி.டி.எம். ஜூனியர் கல்லூரியில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வின்போதும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் ஆடைகளை அணிந்து வந்தனர். மாணவிகள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, காப்பி அடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க தேர்வு அறையின் கண்காணிப்பாளர் ஒவ்வொரு மாணவியாக சோதனை செய்து வந்தார். சில முஸ்லிம் மாணவிகள் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். ஆனால் ஒரு முஸ்லிம் மாணவி மட்டும் ஹிஜாப்பை கழற்ற மறுத்ததோடு, காதில் புளூடூத் வைத்திருக்கிறாரா என்பதை சோதனை செய்யவும் விடவில்லை. ஹிஜாபை சிறிது ஒதுக்கி காதை மட்டும் காட்டுமாறு கண்காணிப்பாளர் கேட்டதும் அந்த மாணவி தேர்வெழுத மறுத்துவிட்டு வகுப்பறையை விட்டு வெளியேறினார். வெளியில் சென்று, தான் ஹிஜாப் அணிந்திருந்ததால், தன்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்று பொய் சொல்லி வகுப்புவாத கலவரத்தை தூண்டி விட்டார். இதனால், முஸ்லிம் மாணவிகள் சிலர் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அங்கு உண்மையில் நடந்தது என்ன என்று அதே வகுப்பில் படிக்கும் அம்மாணவியின் தோழி, பாத்திமா ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினார். இதுகுறித்து பாத்திமா கூறுகையில், “அந்தமாணவி எனது நெருங்கிய தோழிதான். தேர்வு அறையில் காதில் ப்ளூடூத் அணிந்திருக்கிறாரா என்பதை சோதனை செய்வதற்காகத்தான் ஹிஜாப்பை ஒதுக்கிக் காட்டுமாறு கண்காணிப்பாளர் கூறினார். கழற்றக் கூட சொல்லவில்லை. ஆனால், அந்த மாணவிதான் தேர்வை புறக்கணிப்பதாகக் கூறிவிட்டு வகுப்பறையை விட்டு வெளியேறி விட்டார். அவரைப் பற்றி எனக்கு தெரியும். பள்ளிக்கு வரும்போது மட்டும் ஹிஜாப் அணிந்து வருவார். குறிப்பாக தேர்வு என்று வந்து விட்டால் கண்டிப்பாக ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வருவார். ஆனால், வெளியிடங்களுக்கு, விசேஷங்களுக்குச் செல்லும்போது சுடிதார் அணிந்திருந்தால் துப்பட்டாகூட போடமாட்டார்” என்று உண்மையை சொல்லி ரகசியத்தை உடைத்து விட்டார்.