பிரதமர் திரு.நரேந்திர மோடி, தமது 8 ஆண்டுகால நல்லாட்சியின்போது, மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து, தமது இணையதளம் (narendramodi.in) மற்றும் MyGov இணையதளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் டுவிட்டர் பதிவுகளை பகிர்ந்துள்ளார். இந்தக் கட்டுரைகள் மற்றும் டுவிட்டர் பதிவுகள், மத்திய அரசின் தற்சார்பு இந்தியா, மக்கள் நலன் சார்ந்த மற்றும் மனிதநேய அணுகுமுறை, பாதுகாப்புத்துறை சீர்திருத்தங்கள் மற்றும் ஏழைகள் நலன் சார்ந்த ஆளுகையை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை எடுத்துரைக்கின்றன.