கடந்த ஒருசில நாட்களில் பள்ளிக் குழந்தைகள் மீதான இருவேறு பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளன. முதலாவதாக, பழனி அருகே கே.வேலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை அடுத்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், அப்பள்ளி ஆசிரியர் சையது அகமது ரபீக் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பள்ளி அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. அடுத்த செய்தியாக, நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார், அப்பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவியின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். கிறிஸ்டோபர் தலைமறைவாகிவிட்டார். பள்ளி அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இப்படி பல்வேறு நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்றுள்ளன. ஆனால், இந்த செய்திகளை பெரும்பாலான ஊடகங்கள் மறைத்துவிடுகின்றன. அப்படியே வெளியிட்டாலும், ஆசிரியரின் பெயர்களை தைரியமாக வெளியிடுவது இல்லை. வெளியிட்டாலும் ஒரு ஓரத்தில் சிறிய பெட்டிச் செய்தியாக வெளியிடுகின்றன. அதுவே ஹிந்து பள்ளி என்றாலோ ஹிந்து ஆசிரியர் என்றாலோ அதனை தலைப்புச் செய்தியாக வெளியிட்டு பெரிதுபடுத்துகின்றன. இதில் ஈடுபட்டவர்கள் யார் என்றாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், செய்தியை ஒரேமாதிரி வெளியிடுவதில் ஊடகங்கள் ஏன் இப்படி செயல்படுகின்றன? எதனால் இந்த பாரபட்சம்? சிறுபான்மையினர் என்றால் கரிசனமும் ஹிந்துக்கள் என்றால் மட்டும் ஓரவஞ்சனையும் ஏன்?