குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் ஆப்கனில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 டன் ஹெராயின் போதைப் பொருட்களை வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.19,900 கோடி. இரு கன்டெய்னர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக அகமதாபாத், டில்லி, சென்னை, காந்திதாம், மாண்டவி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று இதனை இறக்குமதி செய்துள்ளது. இதில் தொடர்புடைய சென்னை தம்பதி மற்றும் டெல்லியில் வசிக்கும் சில ஆப்கானியர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆப்கன் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தபின், ஹெராயின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.