தேசத்தின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, போரில் உயர் தியகம் செய்த வீரர்களை கௌரவிக்கும் வகையில், ‘தியாகிகளுக்கு வீர வணக்கங்கள்’ என்ற இயக்கம், ஜனவரி 26 அன்று பிரதமரால் துவக்கி வைக்கப்படுகிறது. இந்த இயக்கத்தின் கீழ், தியாகிகளின் 5,000 குடும்ப உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர். இந்நிகழ்ச்சி ஜனவரி 26 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும். தேசம் முழுவதும் உள்ள தேசிய மாணவர் படை இயக்குனரகங்கள், இந்த பாராட்டு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளன. துவக்க தினமான 26ம் தேதி, தமிழகம், புதுச்சேரி,ம் அந்தமான் தேசிய மாணவர் படை இயக்குனரகம், தமிழகம் மண்டலத்தில் உள்ள, 20 தியாகிகளின் குடும்பங்களுக்கு மரியாதை செலுத்த உள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி வரை, தமிழக மண்டலத்தில் உள்ள 263 தியாகிகளின் குடும்பங்கள் கவுரவிக்கப்பட உள்ளன’ என ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.