காஷ்மீர் பண்டிட்டுகள் சிவராத்திரியை முன்னிட்டு ‘ஹெராத்’ எனும் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். மூன்று நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழா காஷ்மீரில் நடைபெறும் ஒரு பாரம்பரியத் திருவிழா. ஆனால் முஸ்லிம் பயங்கரவாதிகளால் காஷ்மீர பள்ளத்தாக்கில் இருந்து ஹிந்துக்கள் விரட்டியடிக்கப்பட்டப் பிறகு அங்கு இவ்விழா கொண்டாடப்பட முடியாத ஒரு சூழல் நிலவியது. தற்போது சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு, அங்கு ராணுவம் பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்கியுள்ளது. அங்கு ஹிந்துக்களின் உரிமை நிலைநாட்டபட்டு ஓட்டுரிமை, நிலம் வாங்கும் உரிமைகள் மீண்டும் கிடைக்கப்பெற்றுள்ளன. வெளியேறிய ஹிந்துக்கள் மீள்குடியேற்றம் மெதுவாக நடக்கிறது. இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற சங்கராச்சாரியார் கோயில் இந்தப் புனிதத் திருவிழா இவ்வருடம் விஷேஷமாகக் கொண்டாடப்பட்டது. கோயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களால் நிரம்பியிருந்தது ஒரு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.