நோய்த்தீர்க்கும் மையம் பாரதம்

உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சி மாநாடு 2022ன் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘நோய்த்தீர்க்கும் முறைகளுக்கான உலகளாவிய மையமாக பாரதம் மாற வேண்டும். ஆயுஷ் துறையில் முதலீடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன. 2014ல் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருந்த வர்த்தகம் இன்று 6 மடங்கு அதிகரித்து 18 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. 75 சதவீதம் என்ற அற்புதமான வருடாந்திர வளர்ச்சி விகிதம் இதை ஒரு கவர்ச்சிகரமான துறையாக மாற்றியுள்ளது. இந்தத் துறையில் முதலீடு செய்யும் பல ஸ்டார்ட் அப்கள் மற்றும் தொழில்களை நாடு விரைவில் காணும் என்ற நம்பிக்கை உள்ளது. கொரோனா பெருந்தொற்றின் போது பாரதம் சிறப்பாகச் செயல்பட்டது. கொரோனாவுக்கு பிந்தைய உலகில் பாரதம் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக திகழ்கிறது. உலகமே கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் நமது நாட்டின் 47 ஸ்டார்ட்அப்கள் யூனிகார்ன்களாக மாறியுள்ளன’ என்று குறிப்பிட்டார்.