மதத்தை ஏற்கும்படி கட்டாயப்படுத்தினார்

லவ் ஜிஹாத் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட நடிகை துனிஷா சர்மா மரணம் தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவரது தாயார் வனிதா ஷர்மா, துனிஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட அவரது காதலன் ஷீசன் கான் குறித்து மேலும் அதிர்ச்சியூட்டும் சில தகவல்களை தெரிவித்துள்ளார். வனிதா ஷர்மா கூறுகையில், “ஷீசன் கான் படப்பிடிப்பு தளங்களில் போதைப்பொருள் உட்கொள்வதை துனிஷா என்னிடம் தெரிவித்துள்ளார். துனிஷாவின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. ஷீசன் என் மகளை இஸ்லாமைப் பின்பற்றும்படி வற்புறுத்தினார். அடித்து கொடுமைப்படுத்தினார். துனிஷாவும் ஹிஜாப்புடன் கூடிய தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஷீசன் கானின் அலைபேசியை எனது மகள் ஒருமுறை சோதித்தபோது ஷீசன் வேறு சில பெண்களிடம் தொடர்ந்து பேசுவதை கண்டுபிடித்தார், தான் ஏமற்றப்பட்டதை உணர்ந்தார். அதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்தனர். ஷீசனின் அறையில் துனிஷா தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது துனிஷா உயிருடன் இருந்திருக்கலாம். ஆனால் ஷீசன் அவரை இறக்க விட்டு சென்றிருக்கலாம். ஷீசனுக்கு தண்டனை கிடைக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன். என் மகளுக்கு எந்த நோயும் இல்லை. என் மகள் போய்விட்டாள், நான் இப்போது தனிமையில் இருக்கிறேன்” என்று குற்றம் சாட்டினார். முன்னதாக, துனிஷாவின் மரணத்திற்குப் பிறகு, ‘ஷீசன் கான் தனது மகளை ஏமாற்றிவிட்டார். திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து 4 மாதங்கள் அவரைப் பயன்படுத்திக் கொண்டார். துனிஷாவுடன் இருந்தபோதும் அவர் வேறொரு பெண்ணுடன் இணைந்துவிட்டார்’ என அவரது தாயார் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.