மத்திய விவசாய சட்டங்களை எதிர்த்து வன்முறை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், விவசாய ஏஜெண்டுகளைத் தடுக்க, அவர்கள் மீது ஹரியானா காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கண்டித்தார். ஹரியானா முதல்வர் எம்.எல் கட்டார் ராஜினாமா செய்யக் கோரியதுடன், விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்கவும் கூறினார். இதற்கு பதில் அளித்த கட்டார், யார் விவசாயிகளின் எதிரி, என் ராஜினாமாவைக் கோர அவர் யார்? எங்கள் விவசாயிகள் யாரும் போரட்டத்தில் ஈடுபடவில்லை. பஞ்சாப் அரசும் காங்கிரசும் வன்முறையைத் தூண்டுகிறது. எங்கள் விவசாயிகளை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம். நாட்டிலேயே அதிக சலுகைகள் வழங்குகிறோம் என கூறி தனது மாநில விவசாயிகளுக்காக அரசு செய்த பணிகளை எடுத்துக்காட்டும் ஒரு கையேட்டைப் பகிர்ந்து கொண்டார்.