கர்நாடகாவில் இளம் பஜ்ரங் தளச் செயற்பாட்டாளர் ஹர்ஷா படுகொலை செய்யப்பட்டதை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை (ஏன்.ஐ.ஏ), இவ்வழக்கு குறித்து குற்றப்பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘இது ஹிந்து சமூகத்தின் மீதான வெறுப்பின் செயல். குற்றம்சாட்டப்பட்ட முஸ்லிம் பயங்கரவாதிகள், ‘காஃபிர் பஜ்ரங்தள் மனிதனைக் கொல்லுங்கள்’ என்று கூறியபடியே ஹர்ஷாவைத் துரத்தித் துரத்தித் சென்று பொதுமக்கள் பார்க்கும் வகையில் அவரைத் தாக்கிக்கொன்றனர். இந்த பயங்கரவாதிகள், தாங்களே ஒரு கும்பலாக உருவாகி, சதி செய்து, பயங்கரவாதத்தை உருவாக்குவதற்காக ஹர்ஷாவை வெட்டிக் கொன்றனர். ஹிந்துக்கள் மத்தியில் பயத்தையும் பயங்கரவாதத்தை உருவாக்கவும் திட்டமிட்டனர். மேலும் ஹிந்து மற்றும் முஸ்லீம் சமூக மக்களிடையே மத நல்லிணக்கத்தை குலைக்கவும் வெறுப்பை ஏற்படுத்தவும் சதி செய்தனர். அதற்கு ஹர்ஷாவை ஒரு முக்கிய ஹிந்து சமூகத் தலைவராகப் பயன்படுத்திக் கொண்டனர், வேவு பார்த்தனர். அவரைக் கொல்ல ஆயுதங்களைப் பெற்றனர். மேலும், ஷிவமொக்காவில் உள்ள முக்கிய ஹிந்து சமூகத் தலைவர்களின் ஊர்வலங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் சமூகத்தின் செயல்பாடுகளின் போது அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆரம்பித்தனர். சி.ஏ.ஏ, என்.ஆர்.சி விவகாரம், ஹிஜாப் சர்ச்சை மற்றும் பஜ்ரங் தள ஆர்வலர்களின் பசு பாதுகாப்பு நடவடிக்கைகளையடுத்து இவர்கள் ஹிந்து சமூகத்தின் மீது பகைமையை வளர்த்துக் கொண்டனர்’ என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பஜ்ரங்தளத்தின் தீவிர உறுப்பினரான ஹர்ஷா இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஷிவமொக்காவில் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தேசிய தலைப்புச் செய்தியாக மாறியது. குற்றம் சாட்டப்பட்ட பத்து பேர் மீதும் உபா, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டங்களின் கீழ் காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது, பின்னர் இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரனைக்கு ஏற்றுக்கொண்டது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, இது “கொலைக்கு மேலான வழக்கு, கண்ணுக்கு தெரிவதை விட மிக அதிகம்” என்று கூறியிருந்தார்.