ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த குஜராத் காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேல், ‘காங்கிரசில் நான் இருக்கிறேனா என்பது எனக்கே சந்தேகமாக உள்ளது. என்னை எந்த கூட்டத்துக்கும் கட்சியின் தேசிய தலைமையோ, மாநில தலைமையோ அழைப்பதில்லை. காங்கிரசில் என் நிலை, புது மாப்பிள்ளைக்கு கருத்தடை செய்யப்பட்டது போல உள்ளது. சமீபத்தில் அவர்கள் 75 புதிய பொதுச் செயலாளர்களையும் 25 புதிய துணைத் தலைவர்களையும் அறிவித்தனர், அதுகுறித்து என்னிடம் எந்த ஆலோசனையும் செய்யவில்லை. கோடல்தாம் அறக்கட்டளைத் தலைவரும், சக்திவாய்ந்த படிதார் இனத் தலைவருமான நரேஷ் படேலை கட்சிக்கு அழைப்பதற்கு காங்கிரஸ் ஏன் தாமதம் செய்கிறது? இது ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமதிக்கும் செயல். குஜராத் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில் அதற்கான எந்த ஏற்பாடுகளையும் கட்சி தலைமை செய்யவில்லை. படேல் சமூகத்தினரின் போராட்டத்தால் பலனடைந்தது காங்கிரஸ். ஆனால்,, அந்த மக்களை அக்கட்சி மதிக்கவில்லை’ என்று கூறினார்.